முன்னணி இயக்குனர் படத்தில் சசிகுமாருடன் இணையும் வாணிபோஜன்..!
முன்னணி இயக்குனர் படத்தில் சசிகுமாருடன் இணையும் வாணிபோஜன்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான வாணி போஜன். தனியார் தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர். பல நாடகங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர். சின்னத்திரையில் நடித்ததன் மூலம் பல விருதுகளை வென்றவர்.சின்னத்திரையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தது மூலம் சில படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இதை தொடர்ந்து இவர் பிசியான ஹீரோவாகவும் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் என இவரது படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து செம அப்டேட்ஸ் கிடைத்துள்ளது. இத்திரைப்படத்தை திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார்.

வாணி போஜன் முதல் முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 4 மங்கிஸ் நிறுவனம் சார்பில் சத்யம் கிஷோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். நாளை இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.