மீண்டும் 'மங்காத்தா' படத்தை வெளியிடனும்.. வெங்கட் பிரபு ட்விட்டரில் கோரிக்கை.!
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தை மீண்டும் வெளியிட வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்ட வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித், அர்ஜூன், த்ரிஷா நடிப்பில் வெளியானது மங்காத்தா. இந்த படம் திரைக்கு வந்து அமோக வசூலை பெற்றது.
இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.இதனிடையே வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரின் 50-வது பிறந்தநாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் "தயா அழகிரி சார் தல 50-வது பிறந்தநாளையொட்டி நம்ம தலயின் 50 வது படமான மங்காத்தாவை எப்படியாவது ஏப்ரல் 30ம் தேதி ரீ-ரிலீஸ் பண்ணா, ஃபேன்ஸ் நாங்க உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம். பாத்து செய்ங்க" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.