'மாடவீதில செருப்பு அணிந்து நடந்தது தப்புதான், மன்னிச்சுடுங்க' - விக்னேஷ் சிவன் மன்னிப்பு கடிதம்
திருப்பதி கோவில் மாடவீதிகளில் செருப்பு அணிந்து நடந்து வந்ததற்கு சர்ச்சையை எழுந்த நிலையில் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி கடிதம் எழுதி உள்ளார்.

திருப்பதி கோவில் மாடவீதிகளில் செருப்பு அணிந்து நடந்து வந்ததற்கு சர்ச்சையை எழுந்த நிலையில் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரி கடிதம் எழுதி உள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையில் நடைபெற்றது, முன்னரே திருப்பதியில் நடைபெறவிருந்த திருமணம் அதிக பேர் பங்கேற்க முடியாத காரணத்தினால் சென்னைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அடுத்த நாளே திருப்பதி தரிசனத்துக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் சென்றனர். அங்கு மாடவீதிகளில் அவர்கள் செருப்பு அணிந்து நடந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது ஏனெனில் மாடவீதிகளில் ஆச்சாரப்படி செருப்பு அணிந்து யாரும் நடக்கக்கூடாது.
இந்நிலையில் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'நாங்கள் அவசரத்தில் காலில் செருப்பு அணிந்து இருப்பதை அறியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டோம், மேலும் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக அப்பகுதியில் நடந்தது என்னால் உணர முடியவில்லை எங்களுடைய செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு அவமரியாதை செய்ய நினைக்கவில்லை எங்களுடைய இந்த சிறப்பான நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி உடையவர்களாக இருப்போம் தொடர்ந்து நேர்மையான வாழ்த்தை மட்டும் எங்களுக்கு வழங்குவீர்கள் என நம்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.