Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் தேவரகொண்டாவின் ஜோடி இவரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் தேவரகொண்டாவின் ஜோடி இவரா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  10 Nov 2023 12:45 PM GMT

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்து அனைவரின் மனிதிலும் இடம் பிடித்தவர் சாரா அர்ஜுன். அதன்பிறகு சைவம் திரைப்படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது ஆதித்த கரிகாலன் உடைய காதலியாக நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். இவரது அழகும் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது.


18 வயதாகும் சாரா அர்ஜுன் தற்போது விஜய் தேவர கொண்டா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் வயது வித்தியாசம் 16 . விஜய் தேவர கொண்டாவின் வயது 34. ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்பிலும் ஆச்சரியத்திலும் உள்ளனர். இருவருமே மிகவும் அழகாக இருப்பதினால் பொருத்தமான ஜோடி தான் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


SOURCE :Oneindiatamil.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News