விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் தகவல் !
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தகவலை தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தகவலை தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி கூட்டம் நடத்துவதற்கு தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தாய், ஷோபனா ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரியில் நடந்த பொதுக்குழுவில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் போடப்பட்டது.
இதனிடையே விஜய் மக்கள் இயக்கம் தற்போது இல்லை. ரசிகர்கள் மட்டுமே தொடர்கிறார்கள் என்று விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு அடுத்தமாதம் அக்டோபர் 29ம் தேதிக்கு பின்னர் ஒத்தி வைப்பதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் கூறியுள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: The New Indian Express