Kathir News
Begin typing your search above and press return to search.

மாஸ்டர் படத்திற்காக முதலமைச்சரை ரகசியமாக சந்தித்த விஜய்.? நடந்தது என்ன?

மாஸ்டர் படத்திற்காக முதலமைச்சரை ரகசியமாக சந்தித்த விஜய்.? நடந்தது என்ன?

மாஸ்டர் படத்திற்காக முதலமைச்சரை ரகசியமாக சந்தித்த விஜய்.? நடந்தது என்ன?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Dec 2020 11:01 AM GMT

மாஸ்டர் படம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று இரவு ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் கசியத்தொடங்கியுள்ளது.

கடந்த மார்ச் 22ம் தேதி முதல் கொரோனா தொற்று ஊரடங்கால் தியேட்டர்கள் அனைத்து மூடப்பட்டிருந்தது. ஊரடங்கை கொஞ்சம் கொஞ்சமாக தமிழக அரசு தளர்த்தி வந்த நிலையில், கடந்த நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாஸ்டர் படம் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று இரவு ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவருவதையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்குமாறு முதலமைச்சரிடம் நடிகர் விஜய் கோரிக்கை வைத்தாக தெரிகிறது.

முதலமைச்சருடனான இந்த சந்திப்பின்போது மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உடன் இருந்துள்ளதாக தெரிகிறது.

இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவிற்கு எதிராக நடிகர் விஜய் கடந்த காலங்களில் கருத்துகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News