பாலிவுட் களமிறங்கும் விஜய்சேதுபதி: படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
பாலிவுட் களமிறங்கும் விஜய்சேதுபதி: படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?
By : Amritha J
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மக்களின் மனதை மட்டும் கவர்ந்தது இல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. தற்போது தமிழ் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிலையில் மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவர் விக்ராந்த் மாஸ்ஸே என்றும் இன்னொருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்றும் செய்திகள் தெரிந்தன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் டைட்டிலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு "மும்பைகார்" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் திரைப்படத்தின் டைட்டில் வெளியானது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றதற்கு தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸே, விஜய்சேதுபதி, தான்ய மாணிக்தலா, ஹிர்து ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே, சச்சின் கேடேகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கின்றார். விஜய்யின் புலி உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
Here's the title look of #Mumbaikar! Happy to be a part of it 😊😊@santoshsivan @shibuthameens @masseysahib #TanyaManiktala @imsanjaimishra@RanvirShorey @SachinSKhedekar@iprashantpillai @hridhuharoon#RiyaShibu @proyuvraaj pic.twitter.com/zythMcokIb
— VijaySethupathi (@VijaySethuOffl) January 1, 2021