விஜய் சேதுபதி - காத்ரினா கைப் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
விஜய் சேதுபதி - காத்ரினா கைப் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

By : Amritha J
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி.அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கதாநாயகன், வில்லன், சிறப்பு தோற்றம் என மாஸ் காட்டி வருவது தெரிந்ததே. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் 'அந்தாதூன்' படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் காத்ரீனா கைப் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் காத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'மேரி கிறிஸ்மஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் கதை திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் பார்வையாளர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கக்கூடிய படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனவே படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் புனேவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
