ஹிந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம்.!
ஹிந்தியில் ரீமேக் ஆகும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம்.!
By : Amritha J
தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் "ஓ மை கடவுளே" ஒரு புதிய கதை தொடரில் உருவான இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.கடந்த 2020 பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம். இந்த படத்தில் அசோக் செல்வன், எம். எஸ். பாஸ்கர்,ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதன் பின் OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தினை தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஓ மை கடவுளே என்ற படத்திற்கான வசனங்களை உமேஷ் சுக்லா என்பவர் எழுதபோவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் கைதி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆன நிலையில் ஓ மை கடவுளே என்ற திரைப்படமும் வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.