விஜயகாந்தின் மூத்த மகன் சினிமாவில் களம் இறங்குகிறாரா - கேப்டன் வெளியிட்ட தகவல்.!
விஜயகாந்தின் மூத்த மகன் சினிமாவில் களம் இறங்குகிறாரா - கேப்டன் வெளியிட்ட தகவல்.!

தமிழ் சினிமாவில் 80,90களில் பிரபலமான நடிகராக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். அந்த வகையில் அவர்களின் இரு மகன்களின் இளைய மகன் சண்முகபாண்டியன் "சகாப்தம்" மற்றும் "மதுரைவீரன்" ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தற்போது அவர் 'மித்திரன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இதுவரை பிசினஸ் மற்றும் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அவர் சினிமாவுக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனவே விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பாடிய தனிப்பாடல் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 5.40க்கு வெளியாக இருப்பதை அடுத்து முழு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஜயபிரபாகரன் ஒரு பாடகரா என்பதை ஆச்சரியத்துடன் பார்க்கும் விஜயகாந்த் ரசிகர்கள் அவர் விரைவில் சினிமாவுக்கும் வரவேண்டும் என்றும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். சின்ன கேப்டன் விஜயபிரபாகரன் சினிமாவுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.