Kathir News
Begin typing your search above and press return to search.

விக்ரமின் 62-வது படம்!

நடிகர் விக்ரம் தனது 62 ஆவது திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விக்ரமின் 62-வது படம்!

KarthigaBy : Karthiga

  |  3 Nov 2023 7:53 AM GMT

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக விக்ரம் தங்கலான் படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே விக்ரம் நடித்த முடங்கியுள்ள 'துருவ நட்சத்திரம்' படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.இந்த நிலையில் அடுத்த புதிய படம் ஒன்றில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இது விக்ரமுக்கு 62 - ஆவது படம் ஆகும்.


இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் , சேதுபதி, சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கி பிரபலமான எஸ்.யு அருண்குமார் டைரக்ட் செய்கிறார். படத்துக்கு தற்காலிகமாக சீயான் 62 என்று பெயர் வைத்துள்ளனர். இது அதிரடி சண்டை படமாக உருவாகிறது. விக்ரம் நடிக்கும் இந்த படம் குறித்தான அறிவிப்பை காணொலி மூலம் வெளியிட்டுள்ளனர். அந்த காணொலியில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ரியாஷிபு தயாரிக்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News