Kathir News
Begin typing your search above and press return to search.

ரியல் ஹீரோக்கு கோவில் கட்டிய கிராமத்து மக்கள்!

ரியல் ஹீரோக்கு கோவில் கட்டிய கிராமத்து மக்கள்!

ரியல் ஹீரோக்கு கோவில் கட்டிய கிராமத்து மக்கள்!

Amritha JBy : Amritha J

  |  22 Dec 2020 4:32 PM GMT

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பல உதவிகள் செய்தவர் சோனு சூட். இவர் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இருந்தாலும் தற்பொழுது மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக வலம் வருகிறார்.

அந்த வகையில் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பியது மட்டுமன்றி அவர்களுக்கு வைப்புநிதி, இன்சூரன்ஸ், வேலை வாய்ப்பு உள்பட பல வசதிகளையும் செய்து கொடுத்தார்.

வெளி நாடுகளில் தவித்த மாணவ, மாணவிகளை சொந்த ஊருக்கு அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்தார். விவசாயி ஒருவர் உழுவதற்கு தன்னுடைய 2 மகள்களை பயன்படுத்தியதை கேள்விப்பட்டவுடன் புத்தம்புது டிராக்டரை அவர் வீட்டின்முன் மறுநாளே நிறுத்தினார்.

அதேபோல் டெல்லியில் பணிபுரிந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் வேலை போய்விட்டதால் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அவருக்கு ஐடி வேலையையும் ஏற்பாடு செய்தார் இதுபோல அவர் செய்த உதவிகள் சொல்லி அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துப்பா தாண்டா என்ற கிராமத்து மக்களை சோனு சூட் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியபோது திரையில் சோனுசூட் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் அவர் எங்கள் கண்களுக்கு ஹீரோவாக திகழ்கிறார். ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிக்கு உதவி செய்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கோயிலை நாங்கள் கட்டியுள்ளோம். கடவுளுக்கு நிகரான அவருக்கு கோவில் கட்டியதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம் என்றும் அவர்கள் நெகழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News