Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகள் போராட்டம் குறித்து இசையமைப்பாளர் பதிவிட்ட வைரல் ட்வீட்!

விவசாயிகள் போராட்டம் குறித்து இசையமைப்பாளர் பதிவிட்ட வைரல் ட்வீட்!

விவசாயிகள் போராட்டம் குறித்து இசையமைப்பாளர் பதிவிட்ட வைரல் ட்வீட்!
X

Amritha JBy : Amritha J

  |  5 Feb 2021 11:40 PM IST

டெல்லியில் கடந்த 2 மாதங்களாக மேலாக வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல ஆதரவாளர்களும்,அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் கடந்த நாட்களாக வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

ஆனால் இதுவரை தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் விவசாயிகள் போராட்டத்திற்கு கருத்து தெரிவிக்காத நிலையில், தற்போது முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.


அந்த பதிவில் அவர் கூறியது: மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது எனவும் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம் அவர்கள் உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான் அவர்கள் 'ஏர்முனை கடவுள்' என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான் என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்விட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News