நடிகர் பரத்திற்கு ஜோடியாகும் விஷால் பட நடிகை!
நடிகர் பரத்திற்கு ஜோடியாகும் விஷால் பட நடிகை!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி ஐயர்.அந்தவகையில் 'அவன் இவன்' என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் முலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது நடிகர் பரத் நடிக்கும் படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ்-2 போட்டியாளர்களில் ஒருவர் ஆகவும்,தெகிடி, முப்பறிமாணம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.இந்தநிலையில் பரத் நடிப்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் பரத் ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு முன்னறிவான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை விஜயராஜ் என்பவர் இயக்க உள்ளார் எனவும் முக்கிய கேரக்டர்களில் தொலைக்காட்சி பிரபலம் மிர்ச்சி செந்தில்குமார், கரு பழனியப்பன், சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதை நடிகை ஜனனி ஐயர் அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
New team new beginnings! 😊🙌🏻 Need All you support and best wishes ! #Munnarivaan @bharathhere @LIBRAProduc @FirstManFilms #VijayRaj pic.twitter.com/He2qxrHN8Y
— Janani (@jan_iyer) February 24, 2021