விஷாலின் 'எனிமி' பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஷாலின் 'எனிமி' பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
By : Amritha J
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால்.இந்நிலையில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ‘எனிமி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி சற்றுமுன் 'எனிமி' படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
கையில் நீண்ட துப்பாக்கியுடன் தலைகுனிந்தவாறு விஷால் இருக்கும் இந்த கருப்பு வெள்ளை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளன உள்ளது. விஷால் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துவரும் இந்த படத்தில் மிருணாளினி நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.
தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் முடிந்துவிடும் என்றும் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.