படப்பிடிப்பினை வெற்றிகரமாக முடித்த விஷ்ணு விஷால்: ரிலீஸ் குறித்து தகவல்!
படப்பிடிப்பினை வெற்றிகரமாக முடித்த விஷ்ணு விஷால்: ரிலீஸ் குறித்து தகவல்!
By : Amritha J
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணுவிஷால். அதன்பின்பு ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என பல படங்களில் நடித்து வெற்றி வாகை சூடியவர்.தற்போது அவர் நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காடன், ஜெகஜாலக்கில்லாடி, எஃப்ஐஆர், மோகன்தாஸ் ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார்.எனவே எஃப்ஐஆர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புரொடக்ஷன் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தைப் பற்றி இவர் கூறுவது:என்னுடைய மிகப்பெரிய பட்ஜெட் படம் இது. பட்ஜெட் மட்டுமின்றி ஆக்சன், தயாரிப்பு, லொகேஷன் மற்றும் கண்டெண்ட் என அனைத்துமே இந்த படத்தில் பிரமாண்டம் தான். இந்த படத்திற்காக 80 நாட்கள் கடுமையாக பணிபுரிந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எனது மகனின் பிறந்த நாளான இன்று படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
#FIR#FIRWrapped
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) January 31, 2021
ITS A WRAPP!!
My biggest movie in terms of budget,action,scale,production,locations n of course CONTENT.
80 days of hardwork(120+ callsheets)
Kudos to @itsmanuanand @shravanthis111 n @VVStudioz
Its my son #ARYANS birthday as well.
Need your love😚.. pic.twitter.com/A9xE1wh214