Kathir News
Begin typing your search above and press return to search.

நான்கு ஆண்டுகள் கழித்தும் சாதனை நிகழ்த்தும் அஜித்'ன் 'விஸ்வாசம்' !

Viswasam creating records.

நான்கு ஆண்டுகள் கழித்தும் சாதனை நிகழ்த்தும் அஜித்ன்  விஸ்வாசம் !

Mohan RajBy : Mohan Raj

  |  13 Aug 2021 8:30 AM GMT

'தல' அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனாலும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.





இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த

2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் திரைப்படம், அனைத்து தரப்பினரும் ரசித்த அஜித்தின் படம் என்றால் அது 'விஸ்வாசம்' மட்டுமே. 200 கோடி அளவிற்கு வசூல் சாதனை இப்படம் நிகழ்த்தியது. இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியே அழைத்து இயக்குனர் சிவா'விடம் படம் தரும் அளவிற்கு இருந்தது இப்படத்தின் வெற்றி. மேலும் இப்படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான் தேசிய விருது வாங்கினார்.





இந்நிலையில் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தும் இப்படம் இணையங்களில் சாதனை நிகழ்த்தி வருகிறது. யூடியூப்பில் மற்றுமொரு சாதனையை நிகழ்த்தி உள்ளது விஸ்வாசம், விஸ்வாசம் படத்தின் வீடியோக்கள் மற்றும் பாடல் வரி வீடியோக்கள் மட்டும் 760 மில்லியன் பார்வையாளர்களை தற்போது கடந்துள்ளது. குறிப்பாக அடிச்சு தூக்கு பாடலின் வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News