எது இத்தனை நடிகர்களா? என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு அதிக அளவிலான நடிகர்களை 'தளபதி 66' படத்தில் நடிக்க வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் 'தளபதி 66' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு ஆகியோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்பொழுது மேலும் முக்கிய கதாபாத்திரங்களாக பிரகாஷ்ராஜ், ஜெயசுதா நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஸ்ரீகாந்த், நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ஷாம் இப்படத்தில் இணைவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இத்தனை நடிகர்கள் நடிக்கிறார்கள் என ஆச்சர்யமாக ரசிகர்கள் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.