Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன துணிச்சல் உனக்கு? 'எங்கள் தளபதியை இப்படி விமர்சிக்க' - பயில்வான் ரங்க நாதனை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்

சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் தளபதி விஜயை தலையில் 'விக்' வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியது சர்ச்சைக்கு உள்ளானது.

என்ன துணிச்சல் உனக்கு? எங்கள் தளபதியை இப்படி விமர்சிக்க -  பயில்வான் ரங்க நாதனை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  23 May 2023 4:15 PM GMT

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், சினிமாவில் நடித்ததை விட தற்போது திரைப்பிரபலங்கள் பற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் பல்வேறு விதமான கிசுகிசுக்களை பரப்பி அதன் மூலம் பிரபலமடைந்தும் வருகிறார் .பல தரப்பினரால் வறுத்தெடுக்கப்பட்டும் வருகிறார்.


நடிகர் விஜய் தலைக்கு விதவிதமான விக் பயன்படுத்தி வருவதாக கூறிய பயில்வான் ரங்கநாதனை தளபதி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இவர் தளபதியை பற்றி மட்டுமல்ல திரையுலையில் உள்ள அனைத்து பிரபலங்களையும் பற்றியும் பல்வேறு விதமான அந்தரங்க கருத்துக்களை பரப்புவதும் அவர்களின் சொந்த வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேசுவதும் ஒரு வேலையாகவே செய்து வருகிறார் .


பயில்வானின் பேச்சுக்கு நடிகர், நடிகைகள் கடும் கண்டனங்களை தெரிவித்தது மட்டுமின்றி அவரை அடித்த சம்பவங்களும் அரங்கேறின. குறிப்பாக நடிகை ராதிகா திருவான்மியூர் கடற்கரையில் வைத்து பயில்வானின் கன்னத்திலேயே அறைவிட்டு சென்றிருந்தார். அதுமட்டுமின்றி நடிகை ரேகா நாயரும் தான் நிர்வாணமாக நடித்ததை விமர்சித்த பயில்வான் பொது இடத்தில் திட்டித்தீர்த்து அடிக்கப்பாய்ந்த சம்பவமும் அரங்கேறி இருந்தது.


அந்த வகையில், நடிகர் விஜய்யை பற்றி பயில்வான் பேசி உள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி அந்த வீடியோவில் அவர் நடிகர் விஜய் தான் நடிக்கும் திரைப்படங்களில் தலைக்கு விதவிதமான 'விக்' அணிந்து நடித்து வருவதாக பேசினார்.அவரின் இந்த பேச்சை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை பதிலுக்கு சரமாரியாக திட்டி தீர்த்து வருகிறார்கள். எங்கள் தளபதியை பற்றி பேசவும் விமர்சிக்கவும் உனக்கு என்ன தகுதி இருக்கிறது? சினிமா பிரபலங்களை பற்றி அந்தரங்க விஷயங்களை பேசி அவதூறு பரப்பும் நீ எல்லாம் ஒரு ஆளா என்று சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News