Kathir News
Begin typing your search above and press return to search.

வாரிசு தெலுங்கு வெளியீட்டில் என்ன பிரச்னை?

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப் பள்ளி, தெலுங்கு தயாரிப்பாளரான திரு ராஜு இயக்கத்தில் விஜய் ரஷ்மிகா மந்தனா மற்றும் பல நடித்துள்ள படம் வாரிசு.அதன் தயாரிப்பாளர் தில் ராஜு

வாரிசு தெலுங்கு வெளியீட்டில் என்ன பிரச்னை?

Mohan RajBy : Mohan Raj

  |  10 Jan 2023 6:09 AM GMT

தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப் பள்ளி, தெலுங்கு தயாரிப்பாளரான திரு ராஜு இயக்கத்தில் விஜய் ரஷ்மிகா மந்தனா மற்றும் பல நடித்துள்ள படம் வாரிசு.அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தற்போது ஹைதராபாத்தில் நடந்த வரும் படத்தின் பிரஷ் மீட்டின் போது தெலுங்கில் ஜனவரி 14ம் தேதி வாரிசுடு என்ற பெயரில் வாரிசு படம் டப்பிங் முடித்து வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.





தெலுங்கு திரை உலகத்தினர் ஆலோசனைப்படி வாரிசுடு படத்தை ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுகிறோம் மேலும் பேசிய அவர் தனது வாரிசுடு படம் எந்த ஒரு படத்திற்கும் போட்டியல்ல, சிரஞ்சீவி பாலகிருஷ்ணா படங்களுடன் இந்த படம் போட்டியில்லை என்று கூறினார்.




கடந்த சில மாதங்களாகவே தெலுங்கில் நேரடி படங்களுக்கு தான் அதிக தியேட்டர்கள் தர வேண்டும் என்ற சர்ச்சை எழுந்து வந்தது. ஆதலால், டோலிவுட் வட்டாரங்கள், பாலகிருஷ்ணா சிரஞ்சீவி படங்கள் முதல் சில நாட்கள் நல்ல வசூலை பெறும் நிலையில் வாரிசுடு படத்தின் வெளியீட்டை தில் ராஜு தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதி பாலகிருஷ்ணாவின் வீரசிமா ரெட்டியும் ஜனவரி 13ஆம் தேதி சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும் வெளியாக உள்ளது. ஜனவரி 14ஆம் தேதி வாரிசுடு படம் வெளியாக உள்ள நிலையில், ஜனவரி 11ஆம் தேதியே தெலுங்கில் துணிவு படத்தின் டப்பிங்கான தெகிம்பு படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News