Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன இவர் கதாநாயகனா?ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான புகழ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

என்ன இவர் கதாநாயகனா?ஆச்சரியத்தில் ரசிகர்கள்

KarthigaBy : Karthiga

  |  10 Aug 2023 5:45 PM GMT

தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான புகழ் வலிமை, எதற்கும் துணிந்தவன், டி.எஸ்.பி , யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், உட்பட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தற்போது 'துடிக்கிறது மீசை' என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். இதில் வர்ஷினி, அக்ஷதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முருகதாஸ் மாறன் யோகிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எம்.ஜே இளன் டைரக்ட் செய்கிறார்.


படம் பற்றி அவர் கூறும் போது காதல் தவறில்லை. ஆனால் காதலுக்காக வாழ்க்கையை அழித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை அழிப்பது தவறு என்று சொல்கிற கதை இது. காதலில் விழுந்து தன்னை அழித்துக் கொள்ளும் இளைஞர்களை பற்றி படம் பேசுகிறது. மதுரையில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் காதல் கதை நகைச்சுவை கலந்து கூற இருக்கிறோம் என்றார். இந்த படத்தை டி.ராம் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் அசோக்குமார். இசை ஸ்ரீகாந்த் தேவா, மிஸ்டர் ஜு கீப்பர் என்ற இன்னொரு படத்திலும் புகழ் நாயகனாக நடிக்கிறார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News