Kathir News
Begin typing your search above and press return to search.

'என்னா படம்? சான்ஸே இல்லை!' - காந்தாரா திரைப்படத்தை பாராட்டிய பூஜா ஹெக்டே

சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்தை நடிகை பூஜா ஹெக்டே அதிகமாக புகழ்ந்துள்ளார்.

என்னா படம்? சான்ஸே இல்லை! - காந்தாரா திரைப்படத்தை பாராட்டிய பூஜா ஹெக்டே

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2022 1:39 PM GMT

சமீபத்தில் வெளியான காந்தாரா திரைப்படத்தை நடிகை பூஜா ஹெக்டே அதிகமாக புகழ்ந்துள்ளார்.




சமீபத்தில் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை இந்த காந்தார திரைப்படம் அதிகமாக ஓடி வசூலை குவித்து வருகிறது இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காந்தாரா' திரைப்படத்தை பாராட்டி இருந்தார்.




தற்பொழுது இப்படத்தை பார்த்து ரசித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே காந்தாரா படம் அவருக்குள் ஏற்படுத்திய பிரம்மிப்பையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்ளும் விதமாக சோசியல் மீடியாவில் பாராட்டும் அவர் கூறியதாவது, 'ரிஷப்ஷட்டி என்ன தெரிந்ததோ அதை எழுதுங்கள் உங்களுக்கு இதயத்துக்கு நெருக்கமாக உள்ள கதைகளை உங்கள் இதயத்தில் இருந்து சொல்லுங்கள். கடைசி 20 நிமிடம் இந்த திரைப்படம் என்னை நெகிழ வைத்து விட்டது. அந்த நேரத்தில் பிரமை பிடித்தவனாக ஆகிவிட்டேன். பூதங்கள், தெய்வங்கள் எனது சிறுவயது நினைவுகளுக்கே நான் சென்று விட்டேன் உங்களிடம் அந்த சக்தி இருக்கிறது, தொடர்ந்து மேலே செல்லுங்கள்' என காந்தாரா திரைப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியை பாராட்டி கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News