'கே.ஜி.எப் 3' எப்பொழுது? தயாரிப்பாளர் வெளியிட்ட முக்கிய தகவல்
கே.ஜி.எப் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

கே.ஜி.எப் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு மற்றும் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற மாதம் வெளியான 'கே.ஜி.எப் 2' திரைப்படம் இந்தியாவில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது 1000 கோடி ரூபாய் வரைக்கும் வசூல் செய்தது 'கே.ஜி.எப் 2' திரைப்படம்.
இந்தநிலையில் 'கே.ஜி.எப் 3' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் வெளியீடு எப்போது இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த நிலையில் அது குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'கே.ஜி.எப் 3' படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கி 2024'ம் ஆண்டு முடியும்.அந்த ஆண்டே படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும்' தெரிவித்துள்ளார்.