Kathir News
Begin typing your search above and press return to search.

அயலான் ரிலீஸ் தேதி எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

அயலான் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அயலான் ரிலீஸ் தேதி எப்போது? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
X

KarthigaBy : Karthiga

  |  9 Aug 2023 4:45 PM IST

சிவகார்த்திகேயனின் அயலான் படம் ரிலீஸ் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். கார்த்தியின் 'ஜப்பான்' கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களும் தீபாவளிக்கு வருகின்றன. இந்த நிலையில் அயலான் படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.


இதனால் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் உள்ளன. இந்திய சினிமாவில் அதிக கிராபிக்ஸ் காட்சிகளை கொண்ட படமாக இது இருக்கும் என்று சுமார் 4,500 கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று பேசுகின்றனர். ஆனாலும் இந்த தகவலை படக் குழுவினர் உறுதி செய்யவில்லை. தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் முயற்சியில் கிராபிக்ஸ் பணிகள் முழு வீட்டில் நடப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News