கேஜிஎஃப் 2 ரிலீஸ் எப்போது? இன்று 6.32 மணிக்கு அறிவிப்பு!
கேஜிஎஃப் 2 ரிலீஸ் எப்போது? இன்று 6.32 மணிக்கு அறிவிப்பு!

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் முதல் பாகம் வெளிவந்து நல்ல வசூலை அள்ளியது. இதனையடுத்து அப்படத்தின் 2வது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு கன்னட மொழியில் கேஜிஎஃப் படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வசூலை அள்ளியது.
இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியாகி நல்ல வசூலை எடுத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து 2வது பாகம் எடுக்க படக்குழு திட்டமிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையடையும் தருவாயில் உள்ளது. கேஜிஎஃப் 2 டீசர் யாஷ் பிறந்தநாள் அன்று கடந்த ஜனவரி 8ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், பல முன்னணி விநியோகஸ்தர்கள் நடிகர்கள் வெளியிட இருக்கிறார்கள்.
இந்நிலையில், நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை காப்பாற்றுவோம் என கேஜிஎஃப் படக்குழு முக்கியமான அறிவிப்பை இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிடுகிறது. அப்போது படம் எந்த நாளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்க உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.