Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸ் இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா.? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா.? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் இந்த வாரம் வெளியேறும் நபர் இவரா.? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
X

Amritha JBy : Amritha J

  |  6 Dec 2020 1:03 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரி,அனிதா,ஷிவானி,ஆஜித், ரம்யா, நிஷா மற்றும் சனம் ஆகிய ஏழு பேர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் நேற்று வரை ஷிவானி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததாகவும் அவரை அடுத்து அஜித் மற்றும் நிஷா ஆகியோர் குறைவான வாக்குகளைப் பெற்று இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் நேற்றுடன் வாக்களிக்கும் நேரம் முடிவடைந்ததை அடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சனம் தான் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சனம் இந்த வாரம் முழுவதும் நன்றாக விளையாடினார் என்பதும் தனது வாதத்தை சரியாக முன் வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கால்செண்டர் டாஸ்க்கில் 1 முதல் 13 வரையிலான ரேட்டிங் பிரச்சினையின் போது மட்டும் அவர் பிடிவாதமாக இருந்து இரண்டாவது இடத்தை அனிதாவிடம் இருந்து பிடுங்கி கொண்டது.

பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அதனால் அவருக்கு வாக்குகள் குறைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இருப்பினும் கண்டெண்ட் கொடுக்காத போட்டியாளர்கள் ஒரு சிலர் இருக்கும் போது அவ்வப்போது கண்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் சனம் ஷெட்டியை பிக்பாஸ் வெளியேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News