பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் - எத்தனை லட்சம் வாக்குகள் தெரியுமா!
பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் - எத்தனை லட்சம் வாக்குகள் தெரியுமா!
By : Amritha J
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 104 நாட்கள் ஆகின்றன. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலிருந்து ஆரிக்கு அதிக ரசிகர் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட உறுதியானது.
அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவருக்கு இருக்கும் ஆதரவும் எத்தனை முறை நாமினேட் செய்யப்பட்டாலும் முதல் நபராக அவர் காப்பாற்றப்படுவதையும் பார்த்த போது ஆரி தான் டைட்டில் வின்னர் என்று மக்கள் எப்பொழுதோ முடிவு செய்துவிட்டனர். இதனை போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சென்றபின் சக போட்டியாளர்களும் உணர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில் டைட்டில் வின்னர் யார் என்பதற்காக வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக பதிவாகிக் கொண்டு வருகிறது.
சற்று முன் வெளியான தகவலின்படி ஆரி, தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை விட சுமார் 17 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து ஆரி தான் டைட்டில் வின்னர் என்பது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இரண்டாமிடம் மூன்றாமிடம் யாருக்கு என்பதுதான் தற்போது பிக்பாஸ் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.