Begin typing your search above and press return to search.
ஹிப்ஹாப் ஆதி வீட்டில் கல்லெறிந்தவர்கள் யார்? என்ன காரணம்?
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By :
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி வீட்டில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தமிழில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார், சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது வீடு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது இந்த நிலையில் சில மர்ம நபர்கள் அவர் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தை அடுத்து ஆதி காவல்துறையில் புகார் அளித்தார். சிசிடிவி கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓட்டுனர்கள் என்றும் குடிபோதையில் இருந்த போது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
Next Story