Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷின் 50வது படத்தை இயக்கப்போவது யார்?

பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 50வது படத்தை இயக்கப்போவது யார்?

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2023 1:57 AM GMT

பிப்ரவரி 17ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக கேப்டன் மில்லர் என்ற படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் ராக்கி, சாணிக் காகிதம் போன்ற படங்களை இயக்கியவர். இந்நிலையில் அதற்கு அடுத்ததாக ராயன் என்ற படத்தில் எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து இயக்க இருக்கும் தனுஷ் அப்படத்தில் தானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷின் 50-வது படம் வெளியாக உள்ளதாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் இந்த படத்தை இயக்கப் போவது யார் என்பது பற்றிய ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை இது குறித்து மற்ற அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

இதன் காரணமாக இப்படம் தனுஷ் அவரே இயக்க இருக்கும் ராயன் படமா அல்லது வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமா என்ற பல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News