அட்லி, மனைவியுடன் கமல்ஹாசனை சந்தித்தது ஏன்.?
அட்லி, மனைவியுடன் கமல்ஹாசனை சந்தித்தது ஏன்.?
By : Amritha J
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் அட்லி. பிரபல இயக்குனரான ஷங்கரின் துணை இயக்குனராக பணியாற்றியவர். அதன்பின் தளபதி விஜயை வைத்து மெர்சல், பிகில்,தெறி ஆகிய வெற்றி படங்களை எடுத்து, அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்.இந்நிலையில் தயாரிப்பாளராக அவரது அடுத்த படைப்பான "அந்தகாரம்" படத்தை தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அடுத்ததாக 'ஷாருக்கான்' நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அட்லியின் மனைவி பிரியா அட்லி தயாரித்த ’அந்தகாரம்’ திரைப்படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் நல்லவிமர்சனங்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அட்லி மற்றும் "அந்தகாரம்"பட தயாரிப்பாளர் பிரியா அட்லி, அர்ஜுன் தாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் இன்று உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர். ’அந்தகாரம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து கமல்ஹாசனிடம் படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.பின்னர் அட்லி கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.