ஏன் நயன்தாரா திருமணத்தை நடத்த திருப்பதி தேவஸ்தானம் அனுமதிக்கவில்லை? - வெளியான காரணம்!
திருப்பதியில் நடைபெற இருந்த நயன்தாராவின் திருமணம் தற்பொழுது மகாபலிபுரத்தில் மாற்றப்பட்ட காரணம் ஏன் என தெரியவந்துள்ளது.

By : Mohan Raj
திருப்பதியில் நடைபெற இருந்த நயன்தாராவின் திருமணம் தற்பொழுது மகாபலிபுரத்தில் மாற்றப்பட்ட காரணம் ஏன் என தெரியவந்துள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதி வழங்கும் பணியில் அவர்களது தரப்பினர் ஈடுபட்டனர் மொத்தம் 150 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் திருப்பதியில் அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் இப்பொழுது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அது இயலாத காரியம் என அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்க இருந்த கல்யாணத்தை தற்பொழுது மகாபலிபுரத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் நடந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் முடிவு செய்துள்ளனர் மேலும் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
