Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸில் அடுத்த வாரம் 2 நபர்கள் வெளியேற்றப்படுவார்களா.?

பிக்பாஸில் அடுத்த வாரம் 2 நபர்கள் வெளியேற்றப்படுவார்களா.?

பிக்பாஸில் அடுத்த வாரம் 2 நபர்கள் வெளியேற்றப்படுவார்களா.?
X

Amritha JBy : Amritha J

  |  23 Nov 2020 10:08 PM IST

பிக்பாஸ் சீசன்-4 கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்து சென்றுள்ளது. அதிலும் பல சண்டைகளும் பிரச்சினைகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுசித்ரா வெளியேற்றபட்டிருந்தார். இவர் வெளியேற்றப் பட்டிருக்கும் நிலையில் தற்போது சனம் செட்டி,ஆஜீத், அனிதா, பாலா,அர்ச்சனா, ஆரி, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரியோ ராஜ் , சோமசேகர், சம்யுக்தா, ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இதுவரை ரேகா, சுரேஷ், வேல்முருகன் சுசித்ரா ஆகிய 4 நபர்கள் மட்டுமே வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.தற்போது அஸீம் வேறு உள்ளே எண்ட்ரி கொடுக்க உள்ளார் என தகவல் வெளியாகி வரும் நிலையில்,அதனால் வீட்டின் எண்ணிக்கை 15 ஆக உயரும் இதனால் சில போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் பிக்பாஸ்க்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதை உறுதி செய்யும் விதமாக நேற்று நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியது: 50 நாட்கள் முடிந்தும் போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கமல் பேசினார். மேலும் "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்றும் கூறினார். எனவே வரும் வாரம் இரண்டு பேர் வீட்டைவிட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் இதை எதிர்பார்த்து காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தும், இதைப் பற்றிய தகவல்கள் சில நாட்களில் வெளியாகும் என்று பரவலாக கமெண்டுகளை பதிவிட்டும் ஷேர் செய்து வருகின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News