தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாகுமா மாஸ்டர் படத்தின் டீசர்..!
தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாகுமா மாஸ்டர் படத்தின் டீசர்..!

By : Amritha J
கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 6 மாதங்களுக்கு மேலாக திரையுலகமே முடங்கிப்போய் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஓரளவிற்கு படப்பிடிப்புகள் குறைந்த ஆட்களை வைத்து தொடங்கியுள்ளனர். இதனால் பல முன்னணி நடிகர்களின் படங்கள் OTT-யில் ரிலீசானது.
இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் 10ம் தேதி முதல் திரையரங்குகளும் திறந்து விட்டன என்பதும் வரும் தீபாவளி முதல், ‘களத்தில் சந்திப்போம், ‘பிஸ்கோத்து’ உள்பட ஒரு சில புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று சூரரைப்போற்று ரிலீஸ் ஆகி, ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டு பார்க்கப்படுகிறது.
மூக்குத்தி அம்மன் போன்ற படங்களும் வெளியாக உள்ளதால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடித்த "ஜகமே தந்திரம்" படத்தின், ஒரு பாடலும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் டீசரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் செய்திகளை பகிர்ந்து வந்தனர். ஆனால் இது குறித்து படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் 'மாஸ்டர்' டீசர் குறித்த எந்தவித அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் டீசரை வெளியிட வாய்ப்பு இல்லை என்று லோகேஷ் கனகராஜ் முன்னதாகவே அறிவித்திருந்தார்.தளபதி ரசிகர்களுக்கு இந்த தீபாவளி ஏமாற்றமே காத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
