Kathir News
Begin typing your search above and press return to search.

பழைய யுவன் கிடைப்பாரா? - ஜாலியாக கேட்ட இயக்குனர்

எனக்கு பழைய யுவன் வேண்டும் என 'கோமாளி' பட இயக்குனர் யுவன் சங்கர் ராஜா'விடம் கூறியது கலகலப்பாக வலம் வருகிறது.

பழைய யுவன் கிடைப்பாரா? - ஜாலியாக கேட்ட இயக்குனர்

Mohan RajBy : Mohan Raj

  |  31 July 2022 11:56 AM GMT

எனக்கு பழைய யுவன் வேண்டும் என 'கோமாளி' பட இயக்குனர் யுவன் சங்கர் ராஜா'விடம் கூறியது கலகலப்பாக வலம் வருகிறது.




கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் இவர் தனது முதல் படத்தின் மூலம் அனைவரது கவனம் ஈர்த்தார், தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடிக்கும் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டைன் நிறுவனம் தயாரிக்கிறது இதில் அவரே கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.




இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 'லவ் டுடே' என பெயரிடப்பட்ட படத்தின் முதல் பாடல் வரும் ஆகஸ்ட் 1'ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த முதல் பாடலை கலகலகப்பான ப்ரமோ வீடியோ வெளியிட்டுள்ளார் அது வைரலாகி வருகிறது. அதில் எனக்கு பழைய யுவன் வேண்டுமென அவர் கேட்பது போற்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது கலகலப்பாக வலம் வருகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News