விஜய் சேதுபதியின் அடுத்த படம் OTT-யில் ரிலீஸ் ஆகிறதா.?
விஜய் சேதுபதியின் அடுத்த படம் OTT-யில் ரிலீஸ் ஆகிறதா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை விஜய் சேதுபதி. தற்போது பல படங்களில் கமிட்டாகி இருந்தாலும் பல படங்களில் நடித்து வெளியிடுவதற்கு தயாராக உள்ளன.அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த "க/பெ ரணசிங்கம்" என்ற திரைப்படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது என்பதும் இந்தப் படத்திற்கு விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படமும் OTT-யில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வந்த "லாபம்". இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என்றும், தியேட்டர் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே "லாபம்" திரைப்படம் திரையரங்குகளில் முதலில் ரிலீஸாவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, சாய்தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கி உள்ளார். டி இமான் இசையில் உருவாகி இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் க/பெ ரணசிங்கம் போலவே இந்த படமும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.