பாபநாசம் 2 படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பாரா.? இயக்குனர் வெளியிட்ட தகவல்..!
பாபநாசம் 2 படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பாரா.? இயக்குனர் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த படம் பாபநாசம். இப்படம் அதிக நாட்கள் திரையில் ஓடி மக்களை கவர செய்த படம். மேலும் அதிக வசூல் சாதனையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி சாதனையை பெற்ற நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' திரைப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி நடித்தனர் என்பதும் இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கினார் என்பது அறிந்ததே.

இந்தநிலையில் மலையாளம் படமான 'த்ரிஷ்யம்' படத்தின் '2-ம் பாகம்' வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படமும் தமிழில் 'பாபநாசம் 2' என்ற பெயரில் ரீமேக் ஆகுமா. அவ்வாறு ரீமேக் ஆனால் அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா என்ற ரசிகர்கள் கேள்வி கேட்டதற்கு இயக்குனர் கூறியுள்ளது. எனவே இது குறித்த பேட்டியில் பாபநாசம் 2 படத்தை இயக்க தயாராக நான் இருக்கிறேன்,கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்க சம்மதித்தால் மட்டுமே என இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.