உலக புகழ் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலாசிரியர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.!
உலக புகழ் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலாசிரியர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.!
By : Kathir Webdesk
மலையாள ரசிகர்களால் மட்டுமின்றி உலகம் முழுவதுமே இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பாடல் என்றால் அது ‘ஜிமிக்கி கம்மல்’. இந்த பாடலை எழுதிய பிரபல மலையாளப் பாடலாசிரியர் அனில் பனச்சூரன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மரணத்தால் மலையாள திரையுலகினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்படப் பாடலாசிரியரான அனில் பனச்சூரன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55, அரபிக் கதா என்ற படத்தில் இடம் பெற்ற இவரது பாடல்களால் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
ஏராளமான கவிதைகளையும் திரைப்படப் பாடல்களையும் அனில் பனச்சூரன் எழுதியுள்ளார். காடு என்ற திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற பாடல்களை விட ஜிமிக்கி கம்மல் பாடல் ஒவ்வொரு கல்லூரி ஆண்டு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வித்தியாசமான முறையில் மாணவர்கள் நடனம் ஆடி மகிழ்ந்தனர். அதிலும் கேரள பெண்கள் தனியாக ஒன்று சேர்ந்து நடனமாடியபோதுதான் ஜிமிக்கி கம்மல் உலக புகழ்பெற்றது என்றது குறிப்பிடத்தக்கது.