Kathir News
Begin typing your search above and press return to search.

வலிமை பட இயக்குனருடன் கைகோர்க்கும் உலகநாயகன்

கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்த பிறகு வலிமை பட இயக்குனருடன் இணைந்து தனது அடுத்த படத்தை தர இருக்கிறார்.

வலிமை பட இயக்குனருடன் கைகோர்க்கும் உலகநாயகன்

KarthigaBy : Karthiga

  |  6 July 2023 6:00 AM GMT

விக்ரம் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த வருடத்தின் இறுதியில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்கிடையில் கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ,வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கிறார்.


இதுவே கமல்ஹாசனின் 233- வது படமாகும். இந்த படத்தை அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசனின் புதிய பட அறிவிப்பை ராஜ்கமல் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனுடன் கையில் தீப்பந்தம் ஏந்தி கமல்ஹாசன் திரும்பி நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். புதிய படத்தின் அறிவிப்பு குறித்து கமல்ஹாசன் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எச் வினோத்தின் முந்தைய படங்களைப் போலவே இந்த படமும் அதிரடி திரில்லர் படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Source:Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News