'விக்ரம்' ஹிட் மகிழ்ச்சியில் பரிசுகளை வாரி வழங்கும் கமல்
'விக்ரம்' படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார் உலக நாயகன் கமலஹாசன்.

'விக்ரம்' படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கி வருகிறார் உலக நாயகன் கமலஹாசன்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம் தற்போது திரையில் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை வெளியான அனைத்து இடங்களிலும் சேர்த்து ஒரு வாரத்திற்குள் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக உலகநாயகன் கமலஹாசன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். சமீபத்தில் கமலின் திரைப்படங்கள் இந்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக பரிசுகளை வழங்கி வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த 13 பேருக்கும் தலா டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 பைக் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு லெக்சஸ் ஆரம்ப காரை பரிசாக வழங்கியுள்ளார் கமல்.