அட !இப்படி ஒரு குரல் வளம் கொண்ட நாட்டுப்புற பாடகர் வில்லன் அவதாரமா?
பிரபல நாட்டுப்புறக் கலைஞர் ஆனா அந்தோணி தாசன் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.
By : Karthiga
நாட்டுப்புற கலைஞரான அந்தோணி தாசன் சினிமா பின்னணி பாடகராகி தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 378 பாடல்கள் பாடியுள்ளார் . சூது கவ்வும் , காக்கி சட்டை , வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரோமியோ ஜூலியட், சிகரம் தொடு, ஜிகர்தண்டா, ஆம்பள, தானா சேர்ந்த கூட்டம் , 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் பாடியிருக்கிறார்.எம். ஜி.ஆர் மகன், அன்பு நாடு, ஒன்பது குப்பம், ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.சில படங்களில் நடித்தும் உள்ளார்.
தற்போது 'தல போச்சே' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இடி முழக்கம், வைரி ஆகிய படங்களில் நடிக்கிறார். 'ஆசை மச்சான்' என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அடுத்து சுதந்திர தினத்தில் வெளியிட 'வந்தே மாதரம்' என்ற பாடல் ஆல்பத்தை உருவாக்கி வருகிறார். இந்த பாடல் ஆல்பத்துக்கான படப்பிடிப்பை ஐவகை நிலங்களில் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.