Kathir News
Begin typing your search above and press return to search.

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு: நடிகர் சிவகுமார் உருக்கமான இரங்கல்.!

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவு: நடிகர் சிவகுமார் உருக்கமான இரங்கல்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 May 2021 9:59 AM IST

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகர் சிவக்குமார் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி பெற்றவருமான கி.ராஜநாராயணன் 99, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவர் புதுச்சேரி பல்கல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.

அதிலும் கரிசல் மண் சார்ந்த இவரின் எழுத்துக்களால், கி.ரா., கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். அவருடைய உடன் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகுமார் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: "நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன்; தற்போது 80 வயதில் எனது ஞானதந்தை 99 வயது கி.ரா. அவர்களை இழந்து விட்டேன். எனக்கும் எழுத்தாளர் கி.ரா.வுக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல் காட்டுக் கடுதாசி, வட்டார வழக்குச் சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகள் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டே இருப்பார் அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News