ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டாரா யாஷிகா ஆனந்த்?
Yashika Ananda was a big boss fame who rectently met an accident.

By : Mohan Raj
விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் தற்பொழுது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ளார் என மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மாமல்லபுரம் அருகே அதிவேகமாக சென்ற போது நள்ளிரவு 1 மணியளவில் சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் யாஷிகா'வின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு ஆண் நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து யாஷிகாவிற்கு இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவசர சிகிச்சைபிரிவில் கடந்த ஒருவார காலமாக கண்காணிப்பில் இருந்தார். தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், இதனால் இவர் ஆபத்தான நிலையை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
