"தோழியை பறிகொடுத்து குற்ற உணர்ச்சியால் தவிக்கிறேன்" - யாஷிகா உருக்கமான பதிவு.
பெரும் விபத்திற்கு பிறகு முதன் முறையாக சமூக வலைதளத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் தன் எண்ணங்களை பதிவிட்டுள்ளார்.

பெரும் விபத்திற்கு பிறகு முதன் முறையாக சமூக வலைதளத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் தன் எண்ணங்களை பதிவிட்டுள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 24'ம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் நடிகை யாஷிகா'வின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய யாஷிகாவுக்கு கை, கால், முதுகு எலும்புகள் முறிந்த நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து இப்படி காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை பழிப்பதா என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு நொடியும் நான் பவணியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என்பது தெரியும். என்னை மன்னித்துவிடு, வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடு தான் இருப்பேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் திரும்பி விடுவாய் என்று தான் பிரார்த்தனை செய்கிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் அவரது ஓட்டுநர் உரிமம் பறிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.