Kathir News
Begin typing your search above and press return to search.

மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு!

தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த யோகி பாபு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு!

KarthigaBy : Karthiga

  |  19 July 2023 7:15 AM GMT

தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்த யோகி பாபுவுக்கு சமீப காலமாக கதாநாயகன் வாய்ப்புகளும் குவிகின்றன. ஏற்கனவே பன்னிக்குட்டி, பொம்மை நாயகி , யானை முகத்தான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.


இந்த படத்தை சிம்பதேவன் டைரக்டு செய்கிறார். படத்துக்கு போட் என்று பெயர் வைத்துள்ளனர். பிரபா பிரேம்குமார் தயாரிக்கிறார். சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் , ஒரு கன்னியும் மூணு களவாணியும் கசடதபற உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். போட் படம் முழுக்க கடலிலேயே படமாக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News