Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் யோகி பாபுவின் 'மண்டேலா' டீசர் வெளியீடு.!

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள ‘மண்டேலா’ படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் யோகி பாபுவின் மண்டேலா டீசர் வெளியீடு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  13 March 2021 7:26 PM IST

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள 'மண்டேலா' படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். இப்படம் விரைவில் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் என கூறப்படுகிறது.





காமெடி நடிகராக வலம் வந்து தற்போது யோகி பாபு ஹூரோவாகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களிலும் காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது. அனைவரையும் சிரிக்க வைப்பார்.




இப்படம் முழுக்க அரசியல் குறித்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில், இப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News