Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவை சூப்பரா கட்டுப்படுத்திட்டிங்க.. அரசை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு பாராட்டு.!

கொரோனாவை சூப்பரா கட்டுப்படுத்திட்டிங்க.. அரசை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு பாராட்டு.!

கொரோனாவை சூப்பரா கட்டுப்படுத்திட்டிங்க.. அரசை பாராட்டிய உலக சுகாதார அமைப்பு பாராட்டு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 1:50 PM IST

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டது. பலர் இன்னும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையே தொடர்கிறது.

இந்த வைரஸ் தொற்று ஒரு சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் இன்னும் வீரியம் குறையாமல் இருந்து வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறது.

இதே போன்று இந்தியாவிலும் வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வீரியம் குறையாமல் இருந்தது. இந்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல கோடி உயிர்களை பாதுகாத்தது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோடரிகோ ஆப்ரின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா பாதித்தவர்களின் தொடர்புகளை அடையாளம் காண்பதில் உத்தரபிரதேச அரசின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது. 70 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகள், மற்ற மாநிலங்கள் பின்பற்றும் அளவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News