Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 28 நாட்கள் முக்கியமானவை.. ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு.!

அடுத்த 28 நாட்கள் முக்கியமானவை.. ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு.!

அடுத்த 28 நாட்கள் முக்கியமானவை.. ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Nov 2020 4:13 PM GMT

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சராசரியாக பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு குறைவாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை நிறைவடைந்துள்ளது. பிற மாவட்டங்களில் பண்டிகை காலத்துக்கு பின்னர் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் மேலும் தொற்று அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் சுகாதாரத்துறை தீவிரமாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வரும் 14 முதல் 28 நாட்கள் மிக, மிக முக்கியமானது என்றும், இந்த காலகட்டத்தில் கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மற்றும் பெருநகர மாநகராட்சி கமிஷனருக்கும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் அனுப்பிய செய்தியில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் முடிவடைந்து மழை மற்றும் விடுமுறைகளால் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

நாளுக்கு நாள் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே செல்கிறது. வரும் நாட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக கவசம் அணிதல், நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுதல் ஆகியவற்றை முழுமையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டுமான பகுதிகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், பணிபுரியும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் கட்டுமான பகுதியிலும், சென்னை தண்டையார்பேட்டையில் பீகாரில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை எந்த சூழ்நிலையிலும் குறைக்க கூடாது. படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News