Kathir News
Begin typing your search above and press return to search.

பொருளாதார வளர்ச்சியைத் தொடர அரசு மற்றும் தொழில்துறைக்கு இடையே நம்பிக்கை வேண்டும்- நிதியமைச்சர்!

பொருளாதார வளர்ச்சியைத் தொடர அரசு மற்றும் தொழில்துறைக்கு இடையே நம்பிக்கை வேண்டும்- நிதியமைச்சர்!

JananiBy : Janani

  |  20 April 2021 2:15 PM GMT

அதிகரித்து கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தொழில் துறை மற்றும் அரசாங்கத்திற்கு இடையே முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.


வணிகம் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்களில் உரையாற்றிய நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலை பரவி வரும் மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை எழுச்சிக்குக் கொண்டுவர மத்திய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

"வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் மற்றும் தொழில்துறைக்கு இடையே முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். தொடர்ச்சியில் இடையூறுகள் ஏற்படக் கூடாது, இது அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும்," என்று நிதியமைச்சர் கூறினார்.

மேற்கு வங்காளம் குறித்துப் பேசிய அமைச்சர், மாநிலத்தில் உள்ள தொழில்களுக்கு ஆக்சிஜென் தேவைப்படுகின்றது. "இந்தியாவின் வரலாறுகள் மேற்கு வங்காளத்தில் இருந்து தொடங்கப்பட்டது. தற்போது அங்கு டீ போன்ற தயாரிப்புகள் கூட நலிவடைந்து வருகின்றது," என்று அவர் குறிப்பிட்டார்.

"கொல்கத்தா முன்னர் தொழில்துறையால் மின்னியது. அது மீண்டும் தொடர வேண்டும். மேற்கு வங்காளத்தின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட வேண்டும்," என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறினார். அங்கு ஒவ்வொரு துறைக்கும் உதவி தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அங்கு பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு நிதிகள் வழங்கப்படும். மேற்கு வங்காளத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

source: https://m.economictimes.com/news/economy/policy/need-complete-trust-between-industry-govt-to-sustain-growth-amid-covid-situation-sitharaman/articleshow/82160613.cms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News