ஆக்சிஜென் சிலிண்டர், கிரயோஜெனிக் டான்கேர்ஸ் இறக்குமதி செய்வதற்கான நடைமுறையை எளிதாக்கியது மத்திய அரசு!
By : Janani
தற்போது நாட்டில் உச்சத்தை எட்டியுள்ள கொரோனா தொற்று நோய்க்கு எதிராகப் போராடுவதற்குப் பற்றாக்குறையில் உள்ள உயிர் காக்கும் கருவிகளான ஆக்சிஜென் சிலிண்டர் மற்றும் கிரயோஜெனிக் டான்கேர்ஸ் உள்ளிட்டவரை இறக்குமதிக்குச் செய்வதற்கான பதிவு மற்றும் ஒப்புதல் போன்ற செயல்முறைகளைப் புதன்கிழமை அன்று அரசாங்கம் தளர்த்தியுள்ளது.
இதுபோன்ற ஒப்புதல் மற்றும் பதிவு வழங்கப்படுவதற்கு முன்னர் PESO அமைப்பு போன்ற உலகளாவிய உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தி வசதியை உடல் ரீதியாக ஆய்வு செய்வதற்கான நடைமுறையையும் அரசாங்கம் நீக்கியுள்ளது.
வெளியிடப்பட்ட அதிர்ப்பூர்வ அறிக்கையின் படி, ஆக்சிஜென் சிலிண்டர் மற்றும் கிரயோஜெனிக் டான்கேர்ஸ் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு முன்னர், PESO உலகளாவிய உற்பத்தியை உடல் ரீதியாக ஆய்வு செய்யாது என்பதைத் தெரிவித்தது.
ஆக்சிஜென் சிலிண்டர் மற்றும் கிரயோஜெனிக் டான்கேர்ஸ் போன்றவற்றின் இறக்குமதி செய்வதற்கான உலகளாவிய உற்பத்தியாளர்களின் பதிவு மற்றும் ஒப்புதல் செய்வதற்கான நடைமுறைகளை அரசாங்கம் மறு ஆய்வு செய்யவுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியாளர்களின் சிலிண்டெர்ஸ், டான்கேர்ஸ், கண்டைனர்ஸ் போன்றவற்றின் எண்ணிக்கை மற்றும் அதன் விவர குறிப்பு போன்றவற்றின் ISO சான்றிதழ்களை எந்த தாமதமும் இல்லாமல் சமர்ப்பிப்பதற்கு இத்தகைய ஒப்புதல்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/govt-eases-procedure-for-import-of-oxygen-cylinders-cryogenic-tankers/articleshow/82411843.cms