கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு சிறப்பு நிதி - மத்திய அரசுத் திட்டம்!
By : Janani
இந்தியாவில் பரவி வருகின்ற கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள உள்ளூர் ஊரடங்கு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை ஆதரிக்கும் ஒரு நோக்கிலும், அதனால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ஒரு தொகுப்பை வழங்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இந்த தொகுப்பைப் பெறக் கூடிய சில துறைகள் சுற்றுலா, போக்குவரத்துக்குப் போன்றவை ஆகும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுடன் சேர்த்து சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும் நிதியமைச்சகம் செயல்பட்டு வருகின்றது. இதற்கான ஆலோசனை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதாகவும் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை வெளியீடு கான காலக்கெடு முடிவு செய்யப்படவில்லை என்று அது தெரிவித்தது.
இந்த கொரோன தொற்றின் இரண்டாம் அலை குடும்பங்களைப் பாதித்தது மட்டுமல்லாமல், மார்ச் மாத தொடக்கத்தில் பயணங்களையும் பாதித்துள்ளது. இந்தியாவின் தொழில்துறை நகரங்களான மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடும் கூட தொழில்களைத் தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைத்துள்ளது.
அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் நுகர்வோர் மத்தியில் சேமிப்பு குறைவால், இந்த நிதியாண்டு ஏப்ரல் 1 இல் தொடங்கியதை தொடர்ந்து கணிப்புகளைக் குறைக்கப் பல பொருளாதார வல்லுநர்களை தூண்டியது. பார்க்லேஸ் 11 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்தது. இருப்பினும் இந்திய ரிசெர்வ் வங்கி தனது திட்டங்களை 10.5 சதவீதமாகத் தக்கவைத்துக் கொண்டது.
பொருளாதாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சாத்தியமான தூண்டுதல்கள் குறித்து அவர் பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். "கடந்த ஆண்டை போலப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுமா என்று தெரியவில்லை. உள்ளூர் ஊரடங்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கும். இது தொடக்கத்தை ஒப்பிடும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீத புள்ளிகளுக்கு இழப்புக்கு வழிவகுக்கும்," என்று முன்னர் மூத்த நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Source: Business Today